முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகார் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை.25 - பிகார் மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, மாநில கட்சித் தலைவர் மங்கள் பாண்டே, முன்னாள் மாநில அமைச்சர் பிரேம்குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நந்த கிஷோர் யாதவ் ஆகியோர் போட்டியில் உள்ளனர். பிகாரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த லாலு பிரசாத யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை தோற்கடித்து, 2005-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி.

2010-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் 2-வது முறையாக இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எனினும், பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதையடுத்து, கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. இதனால் அடுத்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் சுசில்குமார் மோடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக சுசில்குமார் மோடியை அறிவிக்கலாம் என மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த பொறுப்புக்கு கடும் போட்டி தொடங்கி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்