முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மொழி மாநாடு முறைகேடு: ஐகோர்ட்டு நோட்டீசு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 25 - செம்மொழி மாநாடு முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்யாத போலீஸ் அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.ரமேஷ்பாபு தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு மனுவில் கூறியிருப்பதாவது;-

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள், இந்த மாநாடு நடத்த ரூ.386 கோடி செலவானது என்று அறிவித்தனர்.

இதன்பின்னர், ரூ.301 கோடி செலவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநாட்டுக்கு ஆன செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழ்நாடு தணிக்கை தலைமை அதிகாரி ரூ.151 ÷ காடி மட்டுமே செலவு செய்யப்பட்டதாக பதிலளித்தார்.

எனவே, இந்த முறைகேடு குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, என் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, லஞ்ச ஒழிப் புத்துறை இயக்குனர் (பொறுப்பு) வெங்கட்ராமன் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, ‘மனுவுக்கு வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்