முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமுல் காங்., எம்பி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை.30 - கம்யூனிஸ்டு பெண் தொண்டர்களை கற்பழியுங்கள் என்று பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தவிட்டது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தபஸ் பல் இவர் சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சியை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தார். கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களை கொன்று அவர்களது பெண்களை கற்பழியுங்கள் என்றார். அவரது பேச்சு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் தனது எம்பியை கண்டித்ததுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் அவர் அப்படி பேசியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின என்றாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே கொலை-கற்பழிப்பு மிரட்டல் விடுத்த தபஸ் பல் எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபங்கள் தத்தா மேற்கு வங்க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டால் அது ஒவ்வொருக்குமான நிதி மறுப்பதாகும் என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னதை மேற்கொள் காட்டிய நீதிபதி உடனே தபஸ் பல் எம்பியின் பேச்சு பற்றி சிஐடி விசாரணை நடத்தி 72 மணி நேரத்துக்குள் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தபஸ் பல் எம்பி பேச்சு பற்றி இதுவரை போலீஸ் காரர்கள் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சட்டத்தை உருவாக்கியவர்களே சட்டத்தை உடைக்கலாமா? இதை எந்த நீதிமன்றமும் கண்ணை மூடிகொண்டு வேடிக்கை பார்க்காது என்றும் நீதிபதி தத்தா எச்சரிக்கைவிடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்