முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆடிப்பூரத் தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.30 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோயில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்ப்பதற்காக பக்தர்கள் திரண்டு வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு உற்சவங்கள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையோட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஆண்டாளும் ரங்கமன்னாரும் மேளதாளங்கள் முழஙஅக கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு, தோரில் அமர்த்தப்படுகின்றனர். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. காலை9.5 மணிக்கு பக்தர்கள் படைசூழ இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்காக பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்