முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியத் தூதரை திரும்ப அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 2 - ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரை திரும்ப அழைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக பசுமைத் தாயகத்தின் நிறுவனரும், வழக்குரைஞருமான கே.பாலு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த மார்ச் மாதம் 3 முதல் 28-ஆம் தேதி வரை ஜெனீவாவில் நடந்த ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தில் நான் பங்கேற்றேன்.

அப்போது, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது தொடர்பாக 42 நாடுகள் இணைந்து வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போது, அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராவோ எந்த ஒரு முடிவும் எடுக்காமல் வாக்களிப்பில் இந்தியா பங்கு கொள்ளவில்லை.

மேலும், இந்தத் தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு பாகிஸ்தான் மற்றும் சீனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தவிர, தீர்மானத்தின் 10-வது பத்தியை நீக்குமாறு பாகிஸ்தானும் கோரியது.

இதற்கு, மத்திய அரசின் வெளியுறவுத் துறையை ஆலோசிக்காமல், இந்தியத் தூதர் திலீப் சின்ஹா பாகிஸ்தானுக்கு சாதகமாக வாக்களித்தார். இது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை அறியாமல், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியத் தூதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை, தூதரகத்திலிருந்து திரும்ப அழைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இலங்கை நமது அண்டை நாடு. அதனால், அது சுமூகமான உறவை பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும், 25-வது மாநாட்டில் இந்தியாவுக்குôன ஐ.நா.தூதர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை காண்பிக்க மனுதாரர் தவறிவிட்டார்.

அதனால், மனுதாரரின் வேண்டுகோளை பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்