முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் மிரட்டல்: மோடி பாதுகாப்புக்கு மாற்று ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable


புது டெல்லி, ஆக 20 - பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மமாதம் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு அதிக மிரட்டல்கள் வந்தன. அவர் பேசிய பாட்னா பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர். நரேந்திர மோடி உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதை கண்டறிந்து உளவுத் துறை எச்சரித்ததை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மோடி பிரதமரானதும் அவரது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. என்றாலும் பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என்பதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிகவும் தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி விழாவுக்கு வரும் போது தாக்குதல் நடத்த பாகி்ஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நேபாளத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளும், சிமி தீவிரவாதிகளும் சந்தித்து பேசினார்கள். அது போல பாகிஸ்தானில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகளும் சந்தித்து பேசினார்கள். இந்த இரு கூட்டங்களிலும் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்துவது பற்றி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி டெல்லியில் சாலை வழியாக பயணம் செய்யும் போது தற்கொலை படை மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்து மத்திய உள்துறையை உஷார்படுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பிரதமர் மோடியின் சாலை பயண பாதைகள் கண்காணிக்கப்பட்டன. அப்போது தீவிரவாதிகள், பிரதமர் மோடியின் பயண பாதையை ஆய்வு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மோடியின் பாதுகாப்பில் புதிய மாற்று ஏற்பாடு ஒன்றை பாதுகாப்பு படையினர் செய்துள்ளனர். அதன்படி பிரதமர் மோடியின் கார் செல்ல இரண்டு பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மோடி இந்த 2 வழிகளில் எந்த வழியில் செல்வார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காரில் வெளியில் புறப்படும் போது குறிப்பிட்ட இந்த 2 சாலைகளிலுமே வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். இரு சாலைகளிலும் பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பு செல்லும். ஆனால் எந்த கார் அணிவகுப்பில் அவர் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. போலி வாகன அணிவகுப்பு மூலம் மோடியின் கார் எந்த வழியில் செல்கிறது என்பதை தீவிரவாதிகள் கண்டுபிடிக்க முடியாமல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்