முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை வரவேற்று மதுரையில் 5 இடங்களில் ராட்சத பலூன்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 20 - மதுரை வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்களை அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று பறக்க விட்டனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி ஆணை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதுரையில் வருகிற 22ம் தேதி 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா 22ம் தேதி பகல் 2 மணியளவில் மதுரை வருகிறார். அவரை வரவேற்றும், முதல்வர் ஜெயலலிதா மதுரை வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் முதல்வருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் மதுரை மாநகரில் முக்கிய இடமான 5 இடங்களில் ராட்சத பலூன்களை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பறக்க விடப்பட்டது. இதில் விழா நடக்கும் இடமான ரிங் ரோடு மஸ்தான்பட்டியில் நேற்று காலை முதல் ராட்சத பலூனை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, மாநில பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று விண்ணில் பறக்க விட்டனர். இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏக்கள். எம். முத்துராமலிங்கம், ஏ.கே. போஸ், கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, துணை மேயர் கு. திரவியம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மா. இளங்கோவன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர் கே. துரைபாண்டியன், சி. தங்கம், வில்லாபுரம் ஜெ. ராஜா, கவுன்சிலர் புதூர் அபுதாஹீர், ஜி.என். அன்பு செழியன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே. முருகேசன், மாவட்ட கவுன்சிலர்கள் அய்யப்பன், எம்.ஏ. பாலு, பூமிநாதன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ஒத்தக்கடை சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்