முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் இன்று வருகை: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.22 - மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடைபெறுவதை, முன்னிட்டு லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இன்று காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் நகருக்குள் லீரி மற்றும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நுழைய அனுமதியில்லை. ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருப்புவனத்திலிருந்து மதுரை வரும் பேருந்துகள் மதுரை சுற்றுச்சாலை சந்திப்பு, தெப்பக்குளம், குருவிக்காரன் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ஆர்ச் வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து திருப்புவனம், ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் லேக்வியூசாலை, அப்போலோ மருத்துவமனை, அண்ணாநகர், விரகனூர் வழியாக சுற்றுச்சாலை சந்திப்பு வந்து செல்லவேண்டும்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் லேக்வியூ, அப்போலோ மருத்துவமனை, அண்ணாநகர், பி.டி.ஆர.பாலம், தெப்பக்குளம், காமராஜர் சாலை கீழவாசல், தெர்குவாசல், என்எம்ஆர் பாலம், வில்லாபுரம், அவனியாபுரம், வழியாக செல்லவேண்டும். தூத்துக்குடியிலிருந்து மதுரைக்குள் வரும் பேருந்துகள் அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், தெற்குமார்ட் வீதி, மஹால் சாலை, கீழவாசல், காமராஜர் சாலை, குருவிக்காரன்சாலை, அரவிந்தகண் மருத்துவமனை, ஆவின், கே.கே.நகர் ஆர்ச் வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லவேண்டும்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகரில் இருந்து மதுரை வரும் பேருந்துகல் கப்பலூர் அருகே உள்ள செக்போஸ்ட் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, எல்லீஸ்நகர் சாலை, ரயில்வே பாலம் வழியாக பெரியார் பேருந்து நிலையம், மேலவெளிவீதி, சேதுபதி பள்ளி, சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம், நீதிமன்றம் வழியாக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் செல்லவேண்டும். மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராஜபாளையம், தென்காசி செல்லும் பேருந்துகள் லேக்வியூ சாலை, அப்போலோ மருத்துவமனை, அண்ணாநகர், தெப்பக்குளம், கீழவாசல், தெற்குவாசல், தெற்குவெளிவீதி, முத்துபாலம், சுப்பிரமணியபுரம், ஆண்டாள்புரம் வழியாக செல்லவேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மீனாட்சிமிஷன் மருத்துவமனை, உத்தங்குடி, மேலூர், வழியாகச் செல்லவேண்டும் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்