முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடலில் புயல்: இன்று தமிழத்தில் மழை பெய்யும்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.24 - அரபிக்கடலில் புயல் சின்னம் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம்அடைந்துள்ளது இதையொட்டி தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. ஆனால் பருவமழை அந்த மாதம் சரியாக பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின் ஜூலை மாதம் முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது ஆகஸ்ட் மத்தி வரை நீடித்தது. கடந்த ஒரு வார காலமாக மழை எதுவும் பெய்யவில்லை. அதனால் தமிழ்நாட்டில் ஈரகாற்றுப்பதம் இல்லை. காற்றாலை மின்சார உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் அரபிக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றலுத்த தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளது என்று வானிலை மைய இயக்குனர் ரமணன் அறிவித்திருந்தார். இது நேற்று புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இதனால் மிகப்பெரிய சுற்றளவில் மிகத்திரள்கள் தோன்றி உள்ளன. இதன்காரணமாக கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கேரள அரசும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட்டுள்ளது.

கேரளாவில் புயல் சின்னம் உருவாகியுள்ளதையொட்டி, அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கர்நாடகத்திலும், தமிழகத்தின் மேற்கு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தில் கனமழை பெய்யும் சூழல் உள்ளதால், காவரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒருரி நாட்களாக கர்நாடகாவில் மழை இல்லாததால் காவிரி நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் காவிரியில் மீண்டும் நீர்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதகரிக்கும் சூழல் உள்ளது.

மழை நிலைவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழ்நாட்டிலும், குறிப்பாக மேற்கு மாவட்டங்களிலும் மிகவும் பலத்த மழை பெய்யும். அதே நேரத்தில் வங்கக்கடலில் வடதமிழக கரையோரம் மேகக்கூட்டம் உள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்றார்.

அரபிக்கடலில் தென் கிழக்கு பகுதியில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.மொத்தத்தில் தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

பேச்சிப்பாறை 6 செ.மீ., வால்பாறை, குளச்சல் தலா 5 செ.மீ., முதுகுளத்தூர், ஓமலூர் தலா 4 செ.மீ., இரணியல், தாளவாடி தலா 2 செ.மீ., கொடைக்கானல், பெரியார், குழித்துறை, ஏற்காடு, நடுவட்டம், பெண்ணாகரம், சேர்ந்தமங்கலம் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையில்மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 25 அடி உயர்ந்தது. சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 75 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 48 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 30 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 19.8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 17 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 6 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 31 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், வடக்கு பச்சையாறு அணையில் 29.2 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 30 மி.மீ மழையும் பெய்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 481 கனஅடி வந்து கொண்டிருந்த பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், சேர்வலாறு அணையின் நீர்வரத்து 8,000 கனடியாகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்