Idhayam Matrimony

திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி, ஆக 29 - திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோயிலி்ல் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக 150 கிலோ எடையில் மெகா கொழுக்கட்டை செய்யப்படுகிறது. இதில் பாதி மாணிக்க விநாயகருக்கும், பாதி உச்சிப்பிள்ளையாருக்கும் படைக்கப்படுகிறது. இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அர்ச்சகர்கள் மடப்பள்ளியில் இருந்து கொழுக்கட்டையின் பாதியை உச்சிப்பிள்ளையாருக்கு கொண்டு செல்கின்றனர்.

மற்றொரு பாதி கொழுக்கட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்படுகிறது. இவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இரவு பால கணபதி அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தேங்காய், பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று காலை துவங்கியது. 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து கொழுக்கட்டை தயாரிக்கப்படும். தினமும் மாலை விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். செப்டம்பர் 11ம் தேதி மூலவர் விநாயகர், உற்சவர் விநாயகருக்கு 25க்கும் மேற்பட்ட பால், பழம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்