முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிராஜ் ரோந்து கப்பல் கடலோரக் காவல் படையில் இணைப்பு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, செப்.2 - அதிநவீன வசதிகள் கொண்ட ரோந்துக் கப்பலான அபிராஜ், இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்படுகிறது. இதற்கான விழா தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெறுகிறது.

கடலோர காவல்படையில் தூத்துக்குடி பிராந்தியத்தில் பணியாற்ரி வந்த அகல்யாபாய், வீரா, நாய்கிதேசி உள்ளிட்ட கப்பல்களுக்கு கடந்த ஆண்டு விடைளிக்கப்பட்டது. அகல்யாபாய் கப்பலுக்குப் பதிலாக ஆத்தேஷ் என்ற புதிய ரோந்து கப்பல் கடந்த மார்ச் மாதம் இணைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாய்கிதேவி கப்பலுக்குப் பதிலாக கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரான ஐசிஜிஎஸ் அபிராஜ் கப்பல் இணைக்கப்படும் என அறிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐசிஜிஎஸ் அபிராஜ் கப்பல் கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்படுகிறது. இந்தக் கப்பல் 93.89 மீட்டர் நீளமும், 4.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. சிறிய துருவ் வகை ஹெலிகாப்டர்களை இறக்குவதற்கு வசதியான ஹெலிபேடு இதில் உள்லது.

மேலும் நவீன துப்பாக்கிகல், தொலைதொடர்பு கருவிகளும் உள்ளன. விழாவில்,கடலோரக் காவல் படை ஐ.ஜி. சர்மா, இந்திய கடற்படையின் கொச்சின் பிராந்திய வைஸ் அட்மிரல் தப்லியல், கடலோரக் காவல் படயில் தூத்துக்கு பிரிவு கட்டளை அதிகாரி அனந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்