முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக கவர்னராக வஜூபாய் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், செப்.03 - கர்நாடக மாநிலத்தின் கவர்னராக குஜராத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் வஜூபாய் வாலா பொறுப்பேற்றார்.

வஜூபாய் நியமனம் குறித்து தன்னிடம் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அதிருப்தி தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் கவர்னர் ஹெச்.ஆர்.பரத்வாஜின் பதவிக்காலம் கடந்த ஜூன் 28-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக கவர்னர் ரோசய்யா கூடுதல் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பிரதமர் மோடிக்கு நெருங்கியவருமான வஜூபாய் வாலா கர்நாடக கவர்னராக கடந்த 26-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா வ‌ஜூபாய் வாலாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் கர்நாடக மாநில‌த்தின் 18-வது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்