முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று 1427 விநாயகர் சிலைகள் கரைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, செப். 8 – விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 29–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

இந்த சிலைகள் அனைத்தும் 3 நாட்கள் பூஜைக்கு பின்னர் படிப்படியாக கரைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் சென்னையில் 156 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன் பிரிவு), இந்து சத்தியசேனா ஆகிய அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் நேற்று 4 இடங்களில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், தி.நகர் முத்துசாமி பாலம், புளியந்தோப்பு ஆகிய 4 இடங்களில் இருந்து 1000–க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் இந்து முன்னணி ஊர்வலத்தில் அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் பங்கேற்றார். மற்ற 2 இந்து அமைப்புகள் சார்பிலும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் அயனாவரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இன்று மட்டும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர். இதில் சிறிய சிலைகளும் அடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக இன்று காலையில் இருந்தே சென்னை மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல்களும் போடப்பட் டிருந்தன.

பட்டினம்பாக்கம், மட்டு மின்றி, நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகிறது. இந்த பகுதிகளிலும் பாதுகாப்புக் காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்