முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.வை சரிவில் இருந்து மீட்க மோடி பிரசாரம் செய்ய திட்டம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.20 - காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் மராட்டியத்தில் வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஓட்டுப் பதிவுக்கான ஏற்பாடுகளில் தேரதல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா3ஜ அதிக தொகுதிகள் கேட்பதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபபறி நீடிக்கிறது. இதே போல் காங்கிரஸ் கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிவுக்கு வர வில்லை. இதனால் இரு கூட்டணியிலும் பேச்சு வார்த்தை நீடிக்கிறது. இதற்கிடையே மராட்டியத்தில் தேர்தல் பிரசார வியூகம் குறித்து பாஜ மேலிடம் ஆலோசித்து வருகிறது.

மராட்டியத்தில் பாஜவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள்யாரும் இஉல்லை. எனவே பாராளுமன்ற தேர்தலை போல் பிரதமர் நரேந்திர மோடியே நேரடி பிரசாரத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் 15 பிரசார கூட்டங்களில் பேசி பாஜ சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் மொத்தமுள்ள 48 தொகுதியில் பாஜ கூட்டணி 42 இடங்களை கைப்பற்றியது. மோடி பிரசாரத்தால் மராட்டியத்தில் பாஜவுக்கு இந்த அளவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. எனவே சட்டசபை தேர்தலிலும் வெற்றியை ஈட்ட மோடி அதிரடி பிரசாரத்தில் குதிக்கிறார்.

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்பு 100 நாட்களில் நடந்த 3 இடைத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய பாஜ அரசு மீது அதிருப்தி நிலவுவதால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது மராட்டியம் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று பாஜ தலைவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவேதான் பிரதமர் மோடியே நேரடி பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

மோடி பிரசாரம் செய்தால் பாஜ 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக மாநில பாஜ நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். மீண்டும் மோடி அலையை உருவாக்கினால் தான் வெற்றி சாத்தியம் என்றும் பாஜவினர் நம்புகிறார்கள்.

மோடி பிரசார கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை திரட்டவும். பிரசார கூட்டங்கள் நடைபறும் இடங்களை தேர்வு செய்வதிலும் மாநில பாஜ நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்