முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு சொத்து ரூ. 39 கோடி

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப் 21 - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில ஆண்டுகளாக தனது சொத்து மதிப்பை வெளியிட்டு வருகிறார். 4வது ஆண்டாக தனது குடும்ப சொத்தை அவர் வெளியிட்டார். அதன்படி தனது குடும்பத்தின் நிகர சொத்து ரூ. 38.92 கோடி என அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ரூ. 41.70 கோடியாக இருந்தது என்றும் இந்த ஆண்டு ரூ. 2 கோடி வரை குறைந்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மட்டும் ரூ. 70.69 லட்சம் சொத்து இருப்பதாக தனது பட்டியலில் அவர் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு ரூ. 42.6 லட்சமாக இருந்தது. ஐதராபாத் ஜூப்லிஹில்ஸ் பகுதியில் உள்ள 1125 சதுர அடி கொண்ட வீட்டின் மதிப்பு ரூ. 23.20 லட்சம் என குறிப்பிட்டு உள்ளார். ஆனாலும் இந்த வீடு பாங்க் ஆப் பரோடா வங்கியில் அடமானத்தில் இருப்பதாக கூறியுள்ளார். 93-94ம் ஆண்டு வாங்கிய கார் மதிப்பு ரூ. 1.52 லட்சம் என்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூ. 10 ஆயிரம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இவரது மருமகள் பிராமினி சொத்து மதிப்பு ரூ.. 5.32 கோடி என்றும் இதில் ரூ. 1..35 கோடி கடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பட்டியல்படி அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஸ் சொத்து கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. மனைவி புவனேஸ்வரியின் சொத்து ரூ. 30.59 கோடி. கடந்த ஆண்டை விட 2.46 கோடி குறைந்தது. ரூ. 67.16 லட்சத்தில் தங்கம் மற்றும் கற்கள் பதித்த நகைகள் இருப்பதாகவும், 327 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகன் லோகேஷ் நிகர சொத்து ரூ. 3.57 கோடி. கடந்த ஆண்டு இவரது சொத்து ரூ. 4.92 கோடியாக இருந்தது. சொத்து பட்டியலை வெளியிட்ட பின் சந்திரபாபு நாயுடு கூறுகையில், அடுத்த ஆண்டு முதல் எனது மற்றும் மனைவி சொத்துக்களை மட்டும் நான் வெளியிடுவேன். மகன், மருமகள் சொத்தை அவர்கள் வெளியிடுவார்கள் என்றார். தனது அரசு மந்திரிகளும் தாங்களே முன்வந்து தங்கள் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்