முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலின் உப கோயில்களிலும் கொலு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப் 23 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களிலும் நவராத்திரி கொலு அமைக்கப்படவுள்ளது.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 25ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை கொலு அமைக்கப்படுகிறது. அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்படும் இந்த கொலுவானது ஜெயமங்களம், சுப மங்களம் எனும் பொருளில் அமைக்கப்படுகிறது.

கொலுவில் தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குழந்தைகளை கவரும் வகையில் சி்த்திரை திருவிழா தேரோட்டம், முருகர் உலகை சுற்றி வரும் காட்சிகள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்படவுள்ளன. அக்டோபர் 3ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாடும் நடைபெறுகிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களான செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் கோயில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றிலும் கொலு அமைக்கப்படுகிறது. இது குறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில், திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் முதன் முறையாக கொலு அமைக்கப்படுகிறது. அங்கு தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்