முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்முறையீடு சாத்தியம் தான்! மூத்த வழக்கறிஞர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப் 29:

முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்த நிமிடமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு மட்டுமே இறுதியானது அல்ல. இதற்கு மேல் இரண்டு மேல் முறையீடுகள் உள்ளன. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில்,

முதல்வருக்கு அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பை அனைவரும் ஒரு பக்கமாகவே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும், ஜாமீன் வழங்க கோரியும் முதல்வர் உட்பட நான்கு பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அந்த மேல் முறையீட்டை விசாரணை செய்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உடனடியாக ஜாமீன் வழங்கவும் வாய்ப்பு உள்ளது.

ஐகோர்ட் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தால் சுப்ரீ ம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம். அதன் மீது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கலாம். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடித்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

அதன் மூலம் முதல்வர் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் முடித்து வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேல் முறையீடுகளில் முதல்வருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டால் அடுத்த நிமிடமே முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர முடியும். அதனால் இந்த தீர்ப்பை இறுதியாக நினைத்து 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறுவது மிகவும் தவறானது என்றார்.

இது தொடர்பாக மற்றொரு மூத்த வழக்கறிஞர் கூறுகையில், கர்நாடக ஐகோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் நீதிக்கும் விடுமுறை வழங்கப்பட்டு விட்டதாக கருத முடியாது. ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வழக்கின் தன்மை, அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து சிறப்பு அனுமதி பெற முடியும். அவ்வாறு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று உடனடியாக மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு நீதிமன்றத்தை பொருத்து முதல்வருக்கு ஜாமீன் கிடைப்பது அமையும். அதனால் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்