முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மேலூர், அக் 2:

மதுரை மாவட்டம் வெள்ளலூரிலுள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் மதுக்கலயங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

வெள்ளலூரிலுள்ள கோவில் வீட்டில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 7 சிறுமிகளுக்கும் அம்மன் நகைகள் அணிவிக்கப்பட்டு மதுக்கலயம் எடுத்தனர். இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மண் கலயத்தில் பால் ஊற்றி தென்னம்பாலையை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதை தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுடுமண் பொம்மைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து 7 அம்மன் குழந்தைகளும் கிராம பிரமுகர்களும் வந்தனர். வெள்ளலூரில் இருந்து புறப்பட்டு மேலவலசை, கோட்டநத்தம்பட்டி, நயித்தான்பட்டி வழியாக கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு சுமார் 9 கி.மீ தூரம் நடந்து வந்தனர். முன்னதாக ஏராளமான இளைஞர்கள் வைக்கோல் பிரி சுற்றியும், காகிதத்திலான பூக்குடை பிடித்தும் ஊர்வலமாக வந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அம்மனை வழிபட்டனர். நேற்று காலை ஏழைகாத்த அம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்