முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை 6–ந்தேதி அரசு விடுமுறை

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.2 - பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை. இதனால் பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில், பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி (திங்கட்கிழமை) மாற்றி விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மேலும் ஒருநாள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.

இன்று (வியாழக்கிழமை) ஆயுதபூஜை, 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விஜயதசமி பண்டிக்கான விடுமுறையாகும். தொடர்ந்து 4 மற்றும் 5–ந்தேதி சனி ஞாயிறு வழக்கமான விடுமுறையாகும். தற்போது 6–ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்