முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜ விரும்பினால் வதேராவை விசாரிக்கட்டும்: காங்.,

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 22 - அரியானாவில் நில பேர விவகாரத்தில் ராபர்ட் வதேரா எந்த தவறும் செய்யவில்லை. பாஜ விரும்பினால் விசாரணை நடத்தி கொள்ளட்டும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அரியானாவில் டிஎல்எப் நிறுவனத்துடனான நிலபேர விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில் முதல்வர் ஹூடா அவசர அவசரமாக தேர்தல் விதிமுறைகளை மீறி ஒப்புதல் வழங்கினார் என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் இதில் எந்த விதிமுறை மீறல்களும் நடைபெறவில்லை என மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனாலும் பாஜ தலைவர்கள் இந்த விவகாரத்தில் அரியானா அதிகாரிகள் முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் அரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் பாஜ பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜோவாலா கூறுகையில், மத்தியிலும், ராஜஸ்தானிலும் பாஜ தான் ஆட்சி செய்து வருகிறது. தற்போது அரியானாவிலும் ஆட்சி அமைக்கவுள்ளது. அவர்கள் விரும்பினால் ராபர்ட் வதேரா நில பேர விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடியும். அவ்வாறு விசாரணை நடத்த முன்வந்தால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஏனெனில் வதேரா எந்த தவறும் செய்யவில்லை. அவர் தனக்கோ, அல்லது வேறு யாருக்குமோ பலனடையும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்