முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ். ராஜேந்திரன் மருத்துவ மனையில் அனுமதி

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.24 - பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

87 வயதாகும் இவரை எஸ்.எஸ்.ஆர் என்றும் லட்சிய நடிகர் என்றும் அழைத்து வந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்திதான் முதல் படம். இவர் மனைவியும் நடிகையான விஜயகுமாரிதான். நடிகராக இருந்து எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாமவர் என்ற சாதனை படைத்தவர் இவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்