முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா காங்., இருந்து 3 எம்எல்ஏக்கள் கட்சி தாவல்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, நவ 1 - மாநில பிரிவினையால் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் செல்வாக்கை இழந்த காங்கிரசுக்கு மீண்டும் அங்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கானா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் முதல் மந்திரி சந்திரசேகரராவின் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தனர். இப்போது மேலும் 3 எம்எல்ஏக்கள் கட்சி தாவி உள்ளனர். காங்கிரசை சேர்ந்த பரிசி தொகுதி எம்எல்ஏ ராம்மோகன் ரெட்டி, கேவெல்லா தொகுதி எம்எல்ஏ யாதையா, கேடார்னஸ் எம்எல்ஏ ரெட்டிநாயக் ஆகியோர் முதல்மந்திரி சந்திரசேகரராவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். தெலுங்கானாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சியுடன் இணைந்து மாநில காங்கிரஸ் செயல்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சியில் இருந்து விலகுவதாக அவர்கள் கூறினார்கள். இவர்கள் தவிர மேலும் ஒரு எம்எல்ஏ கட்சி தாவ திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கவிதாவும் டி.ஆர்.எஸ். கட்சியில் சேருகிறார். ஏற்கனவே 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்த நிலையில் இப்போது மேலும் 3 எம்எல்ஏக்கள் கட்சி தாவி இருப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் டி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 63ல் இருந்து 73 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் தலசானி ஸ்ரீனிவாசராவ், ஸ்ரீகிருஷ்ணா ரெட்டி ஆகியோரும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேரும் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்