முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு கட்டாய பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் பணிக்கு சென்று திரும்பிய இளம் பெண் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பாலின பாகுபாடுகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாலின பாகுபாடுகளை தவிர்ப்பது குறித்து டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த சான்றிதழ்களை அவர்கள் காட்டினாலே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து தகுதிச் சான்றிதழை பெற முடியும். இந்த திட்டம் டிசம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக சில என்.ஜி.ஓ.க்கள் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.
அண்மையில், உபேர் கால் டாக்ஸியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் சிவகுமார் யாதவ் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து