முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னியில் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 40 பேர் மீட்பு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப் பகுதியான மார்டின் பிளேஷில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் சாக்லேட் கபே என்ற பிரபல சிற்றுண்டி நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு பலர் அமர்ந்து குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு திடீ ரென சில மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் யாரும் எதிராபாராத நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிற்றுண்டி நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சிற்றுண்டி நிலையத்தின் வாசல் கதவுகளை மூடிய அவர்கள் அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர். இது பற்றிய தகவலறிந்ததும் துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அவர்கள் சிற்றுண்டி நிலையத்தை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டனர். அப்பகுதி வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதி. இதனால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே சிற்றுண்டி நிலையத்துக்குள் 2 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்பு நிற கொடியை பிடித்தபடி நின்றுள்ளனர். அதில் அரபு மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் சிற்றுண்டி நிலையத்துக்குள் 50 பேரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர்கள் 3 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் எதற்காக துப்பாக்கி முனையில் பிணை கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அமைதியான நாடு. இங்கு அந்த நிலை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிணை கைதிகளில் 5 பேர் அங்கிருந்து தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிணைக் கைதிகளில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவன் மட்டுமே இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அங்கிருந்து 70 பேர் சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்களில் 20 பேர் மீ ண்டும் நாடு திரும்பி விட்டதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் காரணமாக சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மூடப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தகவலை சிட்னியில் இந்திய தூதரக அதிகாரி சஞ்சய்நிர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக தூதரகம் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தங்களது இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ள சிற்றுண்டி நிலையத்தில் இருந்து இந்திய தூதரகம் 400 மீட்டர் தொலைவில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் இந்தியர்கள் உள்ளனரா என கேட்ட கேள்விக்கு இது குறித்து பதில் அளிக்க முடியாது என மறுத்து விட்டார். இதற்கிடையில் சிட்னியில் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புடன் பத்திரமாக இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறினார். வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் இது குறித்து இந்திய தூதரை தொடர்பு கொண்டதாகவும் கூறினார். ஆஸ்திரேலியாவில் பிணை கைதிகள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
சிட்னியில் நடந்துள்ள இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது போன்ற மனிதாபிமானமற்ற இச்சம்பவம் துரதிஷ்டவசமானது என்றார்.
போலீசார் அதிரடியாக சண்டையிட்டு பிணைகைதிகளை மீட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து