முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ விசாரணை

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில், அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலம் பெற சிபிஐக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தவிர, முன்னாள் நிலக்கரி துறை செயலர் பி.சி.பரேக் தொடர்பு குறித்தும் சிபிஐ மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28, 2014-ல் சிபிஐ பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
இதனையடுத்து, "பிர்லா மீதான வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று விசாரணை அதிகாரியிடம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும், முன்னாள் நிலக்கரி துறை செயலர் பி.சி.பரேக் தொடர்பு குறித்தும் சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பிரசார் கூறுகையில், "நிலக்கரிச் சுரங்க வழக்கில், அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சர் மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். பிர்லா வழக்கின் சிபிஐ கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மீண்டும் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்றார்.
இந்த வழக்கின் விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை 2015 ஜனவரி 27-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறின. அவற்றில் முக்கிய மானது 2ஜி ஸ்பேக்டரம் ஊழல் அதைத் தொடர்ந்து நிலக்கரிச் சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் அம்பலத்துக்கு வந்தன. 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரிச் சுரங்க ஊழலில் நாட்டுக்கு ரூ1.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தனிக்கைத் துறை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து