முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலம்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை -  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி  மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அவரது மனைவி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் சர்வமத கோவில்களில் விசேஷ பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து பங்கேற்ற அக்னிச்சட்டி ஊர்வலம் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
   இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,துணை மேயர் கு.திரவியம், ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,எம்.வி.கருப்பையா,சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  அக்னிசட்டி ஊர்வலத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,அவரது மனைவி ஜெயந்தி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டியை கையில் ஏந்தி  மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
     இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, கழக நிரந்தரப்பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான அம்மா மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்ந்திட  வேண்டி  தமிழகம் முழுவதும் பொதுமக்கள்  தினமும் இஷ்ட தெய்வங்களை மனமுருக வழிபட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் முதல்வர் அம்மா மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். இதற்காக 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளனர். நமது பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
   நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, தமிழக மக்களின் முதல்வர் அம்மா பொய்வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்ற தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கோவில்களுக்கு செல்லும் ஒவ்வொரு மக்களும் தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். அவர்களுக்கு எது தேவையோ அதனை முன்வைத்து பிரார்த்திப்பார்கள். ஆனால் இங்கே முதலமைச்சராக அம்மா மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அனைவரும் இறை வேண்டுதல் செய்கிறோம். மக்களின் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அம்மா மீண்டும் வருவார். இவ்வாறு அவர் பேசினார்.
  இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள்  புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத்தலைவர்கள் கே.ராஜபாண்டியன்,கே.ஜெயவேல், நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், எஸ்.முனியாண்டி, முத்துக்கருப்பன்,ஷ.ராஜலிங்கம், ஏ.சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன் , தொகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன்,கிரம்மர் சுரேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன்,சுப்பு ,பகுதி செயலாளர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, அண்ணாநகர் எம்.என்.முருகன், செ.பூமிபாலகன், ஏ.கே.முத்துஇருளாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம்,முனியசாமி, அணி செயலாளர்கள் தமிழ்செல்வன்,விஜயகுமார்,ரமணி,ராஜூவ்காந்தி, வினோத்குமார், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல்,கலைசெல்வன்,புதூர் அபுதாகீர்,மற்றும் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன்,வடக்கு 1 ம் பகுதி பேரவை இணைச்செயலாளர் மகாதேவன்,வடக்கு 1 ம் பகுதி துணைச்செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, கவுன்சிலர்கள் எம்.கேசவபாண்டியம்மாள்,குமுதா.ஜெயலெட்சுமி,இரா.லெட்சுமி, பி.குமார்,விஜயராகவன், மாரி ஆழ்வார் ராமன்,முத்துராஜா,நூர்முகமது,தமிழ்செல்விக்கோட்டைச்சாமி, அனுராதா தினேஷ்,கலாவதி தேவதாஸ்,முருகேஸ்வரி துரைப்பாண்டி,வட்ட செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஏ.காஜா,புதூர் கண்ணன்,கார்த்திக் முனியசாமி, மணிகண்டன், நிர்வாகிகள் ஜி.அன்புசெழியன், காட்டுராஜன், எம்.ஜி.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து