முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - பொங்கல் விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே போல் நேற்று முன்தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 6 மணி நேரமானது. கூடுதல் லட்டு பிரசாத கவுண்டரில் பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 22 ஆயிரம் பக்தர்கள் நடந்து வந்தனர். 31 கம்பார்ட்மென்டுகளில் கூட்டம் நிரம்பி பக்தர்கள் சுமார் 2 கி.மீ தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரமும், அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 18 மணி நேரமும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த 300 ரூபாய் டிக்கெட் பிரத்யேக பிரவேச தரிசனம் பக்தர்களுக்கு 5 மணி நேரமும் ஆனது. மொத்தம் அன்று 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கூட்டம் சற்று கூடுதலாக காணப்பட்டதால் பக்தர்களுக்கு மகா லகு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் லட்டு கவுண்டர்களில் தேவஸ்தான ஊழியர்கள் லட்டு பிரசாதத்தை உதிர்த்தும், சிதைத்தும் எடை குறைவாக பக்தர்களுக்கு விநியோகம் செய்ததாக புகார் எழுந்ததால் தேவஸ்தான துணை அதிகாரி சின்னம்காரி ரமணா, லட்டு பிரசாத அதிகாரி கேவசராஜூ ஆகியோர் லட்டு கவுன்டர்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது ஒரு சில கவுன்டர்களில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட 175 கிராம் லட்டுகள் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லட்டுகளை உதிர்த்தும், சிதைத்தும் எடை குறைவாக பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து