முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஒரு போட்டியில் தடை

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸி. வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிகப்பட்டுள்ளது.
 
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், ஆஸி. அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என ஆட்ட நடுவர்களால் புகார் எழுப்பப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில், ஆஸி. அணி மீது இத்தகைய புகார் வருவது இது இரண்டாவது முறை என்பதால், விதிகளின் படி, அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், ஆட்டத் தொகையில் 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முத்தரப்புத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் ஜார்ட் பெய்லி விளையாடமாட்டார்.
 
மேலும் அணியிலுள்ள மற்ற வீரர்களுக்கும், அவர்களது ஆட்டத் தொகையில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர்கள் வந்து சமரசம் செய்யும் வரை இது நீண்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. ஐசிசி விதிமுறைகளின் படி, ஆட்டத்தின் போக்குக்கு தடை ஏற்படும் வகையில் வீரர் நடந்து கொண்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே ஆஸி. வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து