முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியுறவு துறையின் புதிய செயலராக ஜெய்சங்கர் நியமனம்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மத்திய வெளியுறவு துறையின் புதிய செயலாளராக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எஸ். ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையில் நியமனங்களுக்கான குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதை தொடர்ந்து புதிய வெளியுறவு செயலர் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வெளியுறவு செயலராக பணியாற்றி வந்த சுஜாதாசிங்கின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்டில்தான் நிறைவடையும். இந்த நிலையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய வெளியுறவு செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
 
1976ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரியான சுஜாதாசிங்கின் பதவிக்காலம் உடனடியாக முடித்து கொள்ளப்படுகிறது. அவரது பொறுப்புக்கு நியமிக்கப்படும் 1977ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான ஜெய்சங்கர் இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்படுவதற்கு முன்பாக சீனாவுக்கான இந்திய தூதராகவும், சிங்கப்பூ ருக்கான துணை தூதராகவும் பணியாற்றினார். கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான குழுவில் முக்கிய பொறுப்பையும் ஜெய்சங்கர் வகித்துள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்பு படையின் செயலராகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் பணியாற்றினார். அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து