முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்கங்களுக்கான குத்தகைக் காலம் நீட்டிப்பு

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துள்ள அரசு  நிறுவனங்களின் குத்தகைக் காலம் நீட்டிக்கப்படுவதாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்தார்.

இது குறித்து சுரங்கத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துள்ள அரசு நிறுவனங்கள், அரசுக் கழகங்களின் குத்தகைக் காலம் 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, சுரங்கத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குத்தகைக் காலம் முடிவடைந்த நிறுவனங்களுக்கும், குத்தகைக் கான கால நீட்டிப்பு வேண்டி மனு தாக்கல் செய்துள்ள நிறுவனங்களுக்கும், குத்தகைக் காலம் முடிவடையவுள்ள நிறுவனங்களுக்கும், மேற்பட உத்தரவு பொருத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இரும்பு, அலுமினிய தாதுக்கள் கொண்ட சுரங்கiங்களை ஏலம் விடுவதற்கு வகை செய்யும் அவசரச் சட்டத்திறகு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த அவசரச் சட்டத்தில், சுரங்கங்களின் குத்தகைக்காலத்தை 50 ஆண்டுகளாக உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து