முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் கோயிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இருந்து 266 கிலோ தங்க நகைகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் தலைமை கணக்காயரும், இந்திய கணக்காளருமான வினோத் ராய் தலைமையில் பத்மநாபசுவாமி கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற தணிக்கை குறித்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில்,
பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து 266 கிலோ தங்கம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் 82 முறை திருட்டு நடைபெற்றுள்ளது. கோயில் பணிக்காக மட்டும் 893.44 கிலோ தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 627 கிலோ தங்கம் மட்டுமே மீண்டும் திரும்பி உள்ளது. 266 கிலோ தங்கம் காணவில்லை. தற்போதைய விலை நிலவரப்படி ரூபா 89.90 கோடி தங்கம் காணவில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து