முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., பொதுச் செயலாளர் திக்விஜயசிங் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

போபால் - மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை ஊழியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக்விஜயசிங் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பிரதேச சட்டப்பேரவை முதன்மை செயலாளர் பகவான்தேவ் இஸ்ரானி கூறுகையில்,
சட்டப்பேரவை ஊழியர் நியமனங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் திக்விஜயசிங், அப்போதைய சட்டப்பேரவை தலைவர் சீனிவாஸ் திவாரி உட்பட 19 பேர் மீது போபாலில் உள்ள ஜெஹாங்கீராபாத் காவல் நிலையத்தில் பேரவையின் துணை செயலாளர் ஷியாம்லால் மைத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முதலில் இந்த வழக்கில் 17 பேர் இடம் பெற்றிருந்தனர். பிறகு முன்னால் முதல்வர் திக்விஜயசிங், சீனிவாஸ் திவாரி ஆகியோரையும் இந்த வழக்கில் மாநில அரசு சேர்த்தது.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் பரிந்துரைகளின்படி ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று பகவான்தேவ் இஸ்ரானி தெரிவித்தார்.
1993-2003 காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பில் திக்விஜயசிங் இருந்த போது சட்டப்பேரவை ஊழியர் நியமனங்களில் முறைகேட்டில் ஈடுப்டடதாக 2004-5 காலகட்டத்தில் அப்போதைய முதல்வரும், தற்போதைய மாநில உள்துறை அமைச்சருமான பாபுலால் கௌர் குற்றம் சாட்டினார். அது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சச்சீந்திர துவிவேதி தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்தார். 2006ம் ஆண்டு அந்த குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து