முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள பட்ஜெட் கூட்டத் தொடர்: புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மணி மீது லஞ்சம் ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள் முன்னணியினர் அவையில் கோஷங்களை எழுப்பினர்.

கவர்னர் சதாசிவம் தனது உரையை தொடங்கியதுமே குறுக்கிட்ட சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், நிதியமைச்சர் கே.எம்.மணி மீது லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலும் அவர் பதவி விலகாதது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் கவர்னர் தனது உரையை தொடர்ந்து வாசித்தார். இதனால், எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து