முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இடைத்தேர்தல்: சரத்பவாரிடம் ஆதரவு கோரியது காங்கிரஸ்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மும்பை - மகராஷ்டிரா சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ரானேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் சிவசேனா ஆதரவை கேட்டு சரத்பவாரை சந்தித்து பேசினார். மகராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா கிழக்கு மற்றும் தாஸ்கவுன்ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் வருகிற ஏப்ரல் மாதம் 11ம்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவசேனா சார்பில் திருப்பதி  சாவந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் நாராயண் ரானே பெயரே முன்னிலையில் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாநில தலைவர் அசோக் சவாண் இதனை உறுதிப்படுத்தினார். இடைதேர்தல் வேட்பாளராக ரானேவை அதிகாரபூர்வமாக சவான் அறிவித்துள்ளார். இதற்கான காங்கிரஸ் மேலிட உத்தரவை நேற்று முன்தினம் கட்சியின் பொது செயலாளர் மோகன் பிரகாஷ் டெல்லியில் இருந்து தொலைபேசி மூலமாக சவானுக்கு தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

62 வயதான நாராயண் ரானே ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடால் தொகுதியில் சிவசேனா வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்தார். இருந்தபோதும் தற்போதுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு ரானேவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக பாந்த்ரா கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக சிவசேனாவின் ஆதரவை கேட்டு அதன் தலைவர் சரத்பவாரை சந்தித்து ரானே பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் தற்போது பாந்த்ரா கிழக்கில் எம்.ஐ.எம். நவநிர்மான் சேனா, என்.சி.பி. ஆகியவையின் ஆதரவும் ரானேவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவில் ஒரு தரப்பினர் சிவசேனா இந்த இடைத்தேர்தலில் தோற்றால்தான் அரசின் மீதான அதன் அழுத்தம் குறையும் என்றும் கருதுவதாக தெரிகிறது. எனவே இம்முறை ரானேவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சமீபத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் மறைந்ததையொட்டி காலியாக உள்ள தாஸ்கவுன் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட போவதில்லை என்றும் அசோக் சவான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து