முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் திட்டங்களை கூட்டாக எதிர்க்க திட்டம்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றத்தில் நிலம் கையக திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை திரிணாமுல், ஆம் ஆத்மி கூட்டாக எதிர்த்து செயல்படுவது குறித்து மம்தாவும், கெஜ்ரிவாலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

பாராளுமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க புதிய கூட்டணி ஒன்று தயாராகி வருகிறது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்க ஆம் ஆத்மியின் ஒத்துழைப்பை கோருவது தொடர்பாக திரிணாமுல் ஆலோசித்து வருகிறது. இதனையொட்டி ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் முயற்சியால் ஜனாதிபதி மாளிகை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின. இதனையடுத்து தற்போது இந்த புதிய கூட்டணி உதயமாகி உள்ளது.இருவரும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ள போதிலும் இன்னும் தேதிமற்றும் இடம் முடிவு செய்யப்படவில்லை. குறிப்பாக மம்தா இந்த விஷயத்தில்ஆர்வம்காட்டி வருவதாக தெரிகிறது.

மேலும் மம்தாவை பொருத்தவரையில் டெல்லி அரசியலில் தனது கட்சியின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம்பெற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ள மம்தாவிடம் இருந்து சில விஷயங்களை கற்று கொள்ள முடியும் என ஆம் ஆத்மி கருதுகிறது.

அதே போல்மேற்குவங்கத்திற்கு வெளியே திரிணாமுலை பலப்படுத்தும் நோக்கிலும், பாஜகவுக்கு எதிராக தனது அரசியலை வலுப்படுத்தும் நோக்கிலும் மம்தாவின் இந்த அரசியல் நகர்வு இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே அடுத்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து