முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-டிக்கெட் மூலம் முன்பதிவு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - இ-டிக்கெட் மூலம் ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம். இல்லையெனில், அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் வணிகப் பிரிவின் அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் அடையாள அட்டை வழங்கும் தேதி அறிவிக்கப்படும். இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து