முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா காணிக்கை கோவில் அலுவலகத்தில் செலுத்தலாம்

சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா காணிக்கையை கோவில் அலுவலகத்தில் செலுத்தலாம் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா வரும் 20ம் தேதி முதல் 2ம் தேதி முடிய நடைபெறவுள்ளது. சித்திரை பெருவிழாவிற்கும், 30ம் தேதி நடைபெறவுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 30ம் தேதி அன்று 250 டன் ஒப்பன் ஏசி வசதியும், மலர் அலங்காரம் தெய்வீக திருமண மேடையில் செய்யப்படவுள்ளது. இச்சித்திரை பெருவிழா திருக்கல்யாணத்திற்கு காணிக்கையினை பணமாக செலுத்த விரும்புவர்கள் திருக்கோவில் அலுவலகத்தில் காணிக்கையினை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

திருக்கோவிலுக்கு பொருளாக காணிக்கை செலுத்துபவர்கள் பொருளினை உள்துறை அலுவலகத்தில் வழங்கி அதற்குரிய ரசீது பெற்று கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று சேவார்த்திகளுக்கு உபயதாரர்கள் தங்கள் பொறுப்பில் பிரசாதங்கள் கொடுக்க விரும்பினால் பிரசாதத்தின் விபரம் வழங்கப்படவுள்ள பொருள்கள் விபரம், வழங்கப்படவுள்ள இடம், நாள் ஆகியவற்றினை குறிப்பிட்டு முன்கூட்டியே விண்ணப்பித்து திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று வழங்கலாம். உபயதாரர்கள் விவரம் பற்றி அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

திருக்கோவிலுக்கு நன்கொடைகள் வழங்குவதற்கு மூன்றாம் நபர்கள் யாரையும் அணுக வேண்டாம். திருக்கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் விளம்பரம், உபயம் செய்தல், நன்கொடை செய்வது தொடர்பாக அணுகினால் திருக்கோவில் நிர்வாகத்தையோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து