முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2555 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2172 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்து ஆண்டு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மூலம் கூடுதலாக 100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன.

7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடந்த வருடம் 498 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. சென்னையில் அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் 85 இடங்கள் அரசு ஒதுக்கீடாகும்.இது தவிர 18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் 40 ஆயிரம் அச்சடித்து தயாராக உள்ளன. பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியான பிறகு ஓரிரு நாட்களில் விண்ணப்ப வினியோகம் தொடங்கும்.

மே 11 அல்லது 12–ந் தேதியில் விண்ணப்பம் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை யில் பல் மருத்துவ கல்லூரி யிலும் வழக்கம் போல விற்பனை செய்யப்படும் விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., பழங்குடியினர் ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உயரும் நிலையில் மருத்துவ கட்–ஆப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதியியல், உயிரியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்ததால் 200–க்கு 200 கட் ஆப் மார்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.

வழக்கம் போல இந்த வருடமும் பொறியியல் படிப்புகளில் சேர்வதை காட்டிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவே மாணவ– மாணவிகள் ஆர்வம் காட்டு கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து