முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜித்துக்காக தங்கையான லட்சுமிமேனன்?

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. படப்பிடிப்பை மே முதல் வாரத்தில் தொடங்கவுள்ளனர்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஏற்கெனவே ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளார்.

மேலும், இசையமைப்பாளராக அனிருத் தேர்வாகியுள்ளார்.அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு தங்கை வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நித்யாமேனன், ஸ்ரீதிவ்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், அஜித்துக்கு தங்கை வேடத்தில் எல்லாம் நடிக்க முடியாது என நித்யாமேனன் தரப்பில் இருந்து பதில் வந்ததாக செய்திகள் வெளிவந்தது. ஸ்ரீதிவ்யாவோ எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்.இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால், இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இதுவரை ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்துவந்த லட்சுமிமேனன், அஜித்துக்காக இந்த படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.லட்சுமிமேனன் நடப்பில் சமீபத்தில் வெளிவந்த எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக வெளிவந்த ‘கொம்பன்’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து