முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரவுகளை உயர் நீதிமன்றங்களே மதிக்காவிட்டால் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் சுப்ரீம் கோர்ட் கேள்வி

திங்கட்கிழமை, 4 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றங்களே பின்பற்றாவிட்டால், பொதுமக்கள் எப்படி பின்பற்றுவர் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றை விசாரித்து முடிக்க, நீதிபதிகளின் காலிப் பணியிடங் களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா வாதிட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 17 மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கு தேர்வு நடந்தது. ஐந்து பேரை தேர்வு செய்ய இரண்டரை ஆண்டு ஆனது. அவர்களுக்கும் இன்னும் பணி நியமனம் வழங்கப் படவில்லை என்று அவர் வாதிட்டார். 

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், வழக்குகள் தேக்கமடை வதைத் தடுக்க துரிதமாக செயல்படும் படி உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டால், இப்படி நத்தை வேகத்தில் செயல்பட்டால் என்ன செய்வது? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றங்களே மதிக்காவிட்டால், பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்த ரவை சாதாரண மக்கள் எப்படி மதிப்பார்கள்? கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை. எனவே, இனியும் தாமதிக் காமல் உடனே காலியிடங்களை நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் பதிவாளரை நீக்க வேண்டும்.

காலியிடங்களை நிரப்ப அனைத்து உயர் நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்கா விட்டால், நாங்கள் அதிகாரிகள் மீது நீதித்துறை அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டியது வரும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து