Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறுத்த இரு நாடுகளும் சனிக்கிழமை மாலை பரஸ்பரம் ஒப்புக் கொண்டது. ஆனால், எல்லையில் போர் நிறுத்த உறுதியை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நக்ரோட்டா ராணுவ நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர் ஊடுருவ முயற்சித்ததாக வொயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம நபருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து