எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:
அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம். ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையர் வாழ்க!
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று. அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:
அம்மா என்ற சொல்லுக்கு அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், தான் பசித்திருந்து பிள்ளைகளின் பசியாற்றும் பெருந்தன்மை, தம்மை அழித்து பிள்ளைகளுக்கு வெளிச்சமூட்டும் மெழுகுவர்த்தி என அம்மாவுக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் உண்டு. ஆனால், இவை அனைத்திற்குள்ளும் அடங்காமல் புதிய, புதிய பரிமாணங்களை எடுத்து, அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா. உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; அவர்களை என்றென்றும் வணங்குவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


