முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாளம் தடை: மலை ஏறும் வீரர்கள் ஏமாற்றம்

திங்கட்கிழமை, 4 மே 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத்தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் வீரர்கள் ஏறுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேபாள அரசின் இந்த உத்தரவு மலை ஏறும் வீரர்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது. நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதியன்று 7.9ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

அதேப்போன்று அந்த நாட்டில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் 22 மலைஏறும் வீரர்கள் இறந்தனர். இந்த பலி எண்ணிக் கையை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தற்போது நேபாளம் தடை விதித்து இருக்கிறது. நில நடுக்கத்தின் போது 8ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் எவரெஸ்ட் கீழ் முகாமில் பல நாடுகளின் வீரர்கள் பரிதவித்து நின்றனர்.

மலை ஏறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டதால் இந்திய மலைஏறும் வீரர்களும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இந்த வீரர்கள் நேபாள அரசிற்கு பல லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்தி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து