எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராய்ப்பூர், ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது டெல்லி.
டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான போட்டியில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய டெல்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு பிளே ஆப் வாய்ப்பையும் இழந்த டெல்லி, இப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சூப்பர் கிங்ஸை சந்தித்தது. ஆனால் தொடக்கம் முதல் டெல்லி பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால், சென்னை அணி அதிரடி தொடக்க வீரர்களான மெக்கல்லமும், ட்வைன் ஸ்மித்தும் ரன் அடிக்க சிரமப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக அதிக பந்துகளை சாப்பிட்ட மெக்கல்லம் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித்தும் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவும், 11 ரன்களில் அவுட் ஆனார். அப்போது 9.2 ஓவர்களில் சென்னை 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு டோணியுடன் ஜோடி சேர்ந்த ட்வைன் பிராவோ 8 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் டோணி, ரன் ரேட்டை உயர்த்துவதற்காக சற்று அதிரடி காண்பித்தார். ஆனால், 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த டோணி, ஜாகிர்கானின் அருமையான ஸ்லோ பந்தில், ஷபாஸ் நதீமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினாலும், ஜாகீர்கானின் பந்து வீச்சு மிக அருமையாக இருந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய ஜாகீர்கான் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் பழைய வேகம் மற்றும் துல்லியம் தென்பட்டது. இந்திய அணி சீருடையில் மீண்டும் ஜாகீர்கானை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை, அவர் உருவாக்கினார்.
இதையடுத்து பேட் செய்ய வந்த டெல்லியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன்களிலும், கேப்டன் டுமினி 6 ரன்களிலும் அவுட்டான நிலையில் சென்னை கை ஓங்கியது. ஆனால், தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும், யுவராஜ்சிங்கும் சென்னை கனவை தகர்த்தனர். யுவராஜ்சிங் 32 ரன்களிலும், ஆல்பி மோர்கல் 8 ரன்களிலும் அவுட்டான நிலையில், 16.2 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி வெற்றி இலக்கை எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 70 ரன்களை குவித்தும், கேதர் ஜாதவ் 1 ரன்னிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்கு பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் டுமினி கூறியதாவது:
இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 4 போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் சிற்பபாக செயல்பட்டோம். ஜாகீர்கானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. வெற்றிக்கு அவரது பந்துவீச்சே முக்கிய காரணமாக இருந்தது. இளம் வீரர் ஷிரேஸ் அய்யர் திறமை மிக்க பேட்ஸ்மேன் ஆவார். அடுத்து ஐபிஎல் போட்டியில் நாங்கள் மிகுந்த பலம் பெற்ற அணியாக திகழ்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி குறித்து கேப்டன் டோணி கூறியதாவது:
பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் எங்களது தொடக்கம் மோசமாக இருந்தது. 6 ஓவரில் 20 ரன்களை கூட தொட முடியாமலே போனது. போதுமான ரன்களை எடுக்க இயலாமல் போனதால் தோல்வியை தழுவ நேரிட்டது. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். முதல் அல்லது 2-வது இடத்தை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |