முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பில் புதிய உரத் தொழிற்சாலை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      இந்தியா
Modi

கவுகாத்தி, அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: அசாம் மாநிலத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவதே எங்கள் நோக்கம். தொழில் மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அசாம் மாநில இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணத் தூண்டுகின்றன. யூரியா உரத் தொழிற்சாலை உள்ளூர் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அசாம் மாநில இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

உர ஆலையை நவீனமயமாக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளை புறக்கணித்து, ஊடுருவல்காரர்களை காப்பாற்றினர். ஓட்டு வங்கியை பாதுகாக்க காங்கிரஸ் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்ய, பா.ஜ.க. இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, எங்கள் அரசு அவர்களுக்கு ஆதரவளிக்க அயராது உழைத்து வருகிறது. நமது விவசாயிகளுக்கு தொடர்ந்து உரங்கள் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.

இந்த புதிய யூரியா தொழிற்சாலை, அந்த தேவையை பூர்த்தி செய்யும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தொடங்கியது. காங்கிரஸ் அசாம் மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் அதிகாரித்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து