Idhayam Matrimony

த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      தமிழகம்
vijay 2025-01-17

சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, இன்று (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து