எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொருநை, தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும் என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது. கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும். தனித்துவமான தமிழர்களின் வரலாற்று பெருமையை வெளிக்கொணரும் எந்த ஆய்வும் நடைபெறக்கூடாது என மத்திய அரசு தடுக்கிறது.
இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? 2000 ஆண்டுகால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம். 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூட விடவில்லை. காந்தியின் பெயரை நீக்கியதுடன், 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


