Idhayam Matrimony

நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த தமிழக முதல்வருக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கா் பரப்பில் 54,296 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தின்ம் (டிச. 20) திறந்து வைத்தார்.

நேற்று (டிச. 21) திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில் திருநெல்வேலி மாவட்டத்துக்கான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, உரையாற்றினார். அப்போது, நெல்லை மாவட்டத்துக்கான 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல் அறிவிப்பு:

திருநெல்வேலி மாநகர், காந்திநகரில் அமைந்திருக்கக்கூடிய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

2-வது அறிவிப்பு: 

சேரன்மகாதேவி வட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் ரூ. 4 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3-வது அறிவிப்பு:

நான்குநேரி மற்றும் ராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ. 5 கோடி செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து