ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: போலீ்ஸ் அதிகாரி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 16 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
முதன்முதலாக சூதாட்டம் நடந்தது குறித்து தகவல் அடிப்படையில் சென்னை போலீஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரித்து வந்தார். அப்போது தரகர்களுக்கு உதவும் வகையில் அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு சம்பத்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சம்பத்குமாருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து