முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாராள வர்த்தகத்தில் உள்ள தடையை இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் நீக்க முடியும்: ஐரோப்பிய தூதர்

திங்கட்கிழமை, 18 மே 2015      உலகம்

புதுடெல்லி, தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உள்ள தடையை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நீக்க முடியும். இந்தியா மேற்கொள்ளும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் இடம் பெற ஐரோப்பிய ஒன்றியம் பெரு விருப்பம் கொண்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய துாதர் ஜோவோ கிராவின்கோ தெரிவித்தார்.

ஐரோப்பிய துாதர் டெல்லியில் கூறியதாவது,

தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தடைகள் உள்ளன.இந்த தடையை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நொறுக்க முடியும்.தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாங்கள் இன்னும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உள்ள தடையை நீக்குவது  குறித்து இந்திய அரசும் ஐரோப்பிய ஒன்றிய அரசும் தீவிரம் கொண்டுள்ளன.

தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 2ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லை.இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பவர்கள் இந்த தருணம்தான் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு நேரம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.இது தொடர்பாக இன்னும் சில வாரங்களில் பேச்சு வார்த்தையை துவக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஜூன் மாதம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டத்தில்இந்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்து கொள்கிறார். அவர் பாரிஸ் வரும் போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக கமிஷனர் செசிலியா மால்ம் ஸ்டிரோமும் விவாதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலக நிர்வாகத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய நாடுகளாக உள்ளன இந்த இருநாடுகளின் அமைப்பும் ஒருங்கிணைந்து செயல் பட்டால் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலக அமைதிக்கும் பங்களிப்பதாக இருக்கும்.இந்தியாவில் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஐரோப்பாவில் டான்பே, ரைனே மற்றும் தேம்ஸ் நதியை  சுத்தப்படுத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது இந்த அனுபவத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.இந்தியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதில் வேகம் காட்டுவதை உணர முடிகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்படுவதற்கு 3ஆண்டுகள் முன்பாகவே நாங்கள் மும்பையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து